10,12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 23 Feb 2022 9:28 AM GMT (Updated: 23 Feb 2022 9:28 AM GMT)

மாநில வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்டவற்றின் அனைத்து 10, 12ம் வகுப்புக்கான நேரடி தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஆப்லைன்(நேரடி) முறையில் நடத்துவதற்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய மனுக்கள் மாணவர்களிடம் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் கண்டித்த நீதிபதிகள்  எதிர்காலத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்  என எச்சரிக்கை விடுத்தனர். 

முன்னதாக,  அனுபா ஸ்ரீவஸ்தா என்பவர்  பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.  மாநில வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்டவற்றின் அனைத்து 10, 12-ம் வகுப்புக்கான நேரடி தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பொது நல மனுவை தாக்கல் செய்து இருந்தார். 


Next Story