முஸ்லிம் பெண்களுக்கு சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் எதுவும் செய்யவில்லை- பிரதமர் மோடி


முஸ்லிம் பெண்களுக்கு சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் எதுவும் செய்யவில்லை- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Feb 2022 4:57 PM IST (Updated: 23 Feb 2022 4:57 PM IST)
t-max-icont-min-icon

‘முத்தலாக்’ எனும் கொடிய சுழலில் இருந்து முஸ்லிம் சகோதரிகளை விடுவித்தது தமது அரசுதான் என்று பிரதமர் மோடி கூறினார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அதில் அவர், “வாக்கு வங்கி அரசியலால் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்வில் இருந்த மிகப்பெரிய சவாலை தங்கள் வாக்குகளுக்காக புறக்கணித்தார்கள். முஸ்லிம் வாக்காளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, வலுவான ஆதரவை பா.ஜ.க ஏற்படுத்துவதாகவும், முத்தலாக் எனும் கொடிய சுழலில் இருந்து வந்த முஸ்லிம் சகோதரிகளை விடுவித்தது தமது அரசுதான்" என்று கூறினார்.

“எங்கள் மகள்களின்” பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு பாஜக தான் முன்னுரிமை அளித்தது. தமது கட்சியின் 'இரட்டை இயந்திரம்' அரசாங்கம் அவர்களின் "பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை" உறுதி செய்துள்ளதாக பிரதமர் கூறினார்.

Next Story