போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து நேபாள மக்கள் வெளியேறும்படி அந்நாட்டு அரசு வலியுறுத்தல்


போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து நேபாள மக்கள் வெளியேறும்படி அந்நாட்டு அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2022 11:23 PM IST (Updated: 23 Feb 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து வெளியேறும்படி நேபாள மக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

நேபாளம்,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. 

இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ரஷியாவின் தொடர் நடவடிக்கைகளும் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலே உள்ளது. 

ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நேபாள அரசும் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் நாடு திரும்பும்படி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து நேபாள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உக்ரைனில் வசிக்கும் நேபாள மக்கள் அங்குள்ள தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்கு தங்க வேண்டியிருந்தால் தவிர மற்றவர்கள் கிடைக்கக்கூடிய வணிக விமானங்களைப் பயன்படுத்தி நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேவைப்பட்டால் உக்ரைனுக்கு செல்லும் திட்டத்தை முற்றிலுமாக நேபாள மக்கள் ஒத்திவைக்க வேண்டும். 38-க்கும் மேற்பட்ட நேபாள குடிமக்கள் பேர்லினில் உள்ள நேபாள தூதரகத்துடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story