அசாமில் பீடிக்காக பெற்ற தந்தையை கொன்ற மகன்


அசாமில் பீடிக்காக பெற்ற தந்தையை கொன்ற மகன்
x
தினத்தந்தி 24 Feb 2022 8:14 AM IST (Updated: 24 Feb 2022 8:14 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் கூடுதலாக ஒரு பீடி தராததற்காக பெற்ற தந்தையை மகன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



கவுகாத்தி,


அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் அலிப்பூர் கிராமத்தில் கொல்கச்சியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் லால்மியா (வயது 50).  இவரது மகன் சம்சுல் ஹோக் (வயது 30).

இந்த நிலையில், லால்மியா அவரது வீட்டில் மரணம் அடைந்து கிடந்துள்ளார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.  அதில், பெற்ற தந்தையை மகனே கொலை செய்த விவரம் தெரிய வந்துள்ளது.  இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது, முதற்கட்ட விசாணையில், சம்சுல் அவரது தந்தையிடம் பீடி கேட்டுள்ளார்.  அவரும் கொடுத்துள்ளார்.  இதன்பின் 2வது முறையாக ஒரு பீடியை கேட்டுள்ளார்.  ஆனால், இந்த முறை ஆத்திரமடைந்த அவரது தந்தை கோபத்தில் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் லால்மியாவை ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார்.  இதில், லால்மியா உயிரிழந்து உள்ளார்.  அவர் பயன்படுத்திய ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.


Next Story