உக்ரைன் சென்ற இந்திய விமானம் பாதியில் திரும்பியது


உக்ரைன் சென்ற இந்திய விமானம் பாதியில் திரும்பியது
x
தினத்தந்தி 24 Feb 2022 11:30 AM IST (Updated: 24 Feb 2022 11:37 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இந்தியர்களை மீட்க சென்ற ஏர் இந்தியா விமானம் போர் தொடங்கியதால் தரையிறங்காமல் திரும்பி உள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

இதையடுத்து உக்ரைனுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.

உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. முக்கியமாக, கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷிய ராணுவம் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம்   ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது.

Next Story