உக்ரைனில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என உக்ரைனின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகின்றன. உக்ரைன் மீது பல மணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தும் ரஷியா தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்கத்தொடங்கி உள்ளது. உக்ரைனில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள், சுரங்க்பாதைகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனின் தற்போதைய நிலை நிச்சயமற்றதாக உள்ளது. வீடுகள், தங்கும் விடுதிகள் அல்லது போக்குவரத்தில் எங்கிருந்தாலும் அந்தந்த நகரங்களிலேயே அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என உக்ரைனின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷியா தாக்கி வருவதால் கீவ் நகருக்கு சென்ற இந்தியர்கள் திரும்பி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 1800 118 797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. situationroom@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
Related Tags :
Next Story