உக்ரைனில் இந்தியர்களை வெளியேற்ற அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு...
உக்ரைனில் இந்தியர்களை வெளியேற்ற உதவியாக இந்திய வெளியுறவுத்துறை உதவி மையங்களை அமைத்துள்ளது.
மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியாக மேற்கு உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளின் எல்லையில் வெளியுறவுத்துறை உதவி மையங்களை அமைத்துள்ளது.
தகவல்களுக்கு 1800 118797, +91 112 301 2113, +91 112 301 4104, +91 112 301 7905 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
உக்ரைன், கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள +380 9973 00428, +380 9973 00483, +380 9339 80327 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
உக்ரைன், செர்னிவ்சிவில் உள்ள உதவி மையத்திற்கு +48 575 762 557, +48 660 460 814 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story