குருகிராமில் முன்னாள் கவுன்சிலர், சகோதரர் சுட்டுக்கொலை
அரியானாவின் குருகிராமில் முன்னாள் கவுன்சிலர் , சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குருகிராம்,
அரியானாவின் குருகிராம் அருகே உள்ள படாடி கிராமத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர், பரம்ஜித் சிங் தக்ரான் (வயது 36). இவர் இன்று காலையில் தனது வீட்டுக்கு வெளியே போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கே மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பரம்ஜித் சிங் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. பின்னர் அருகில் நின்றிருந்த பரம்ஜித்தின் அண்ணன் சுர்ஜித் சிங் தக்ரானையும் (39) அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியது.
சுமார் 30 முறை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இருவரையும் அப்பகுதி கிராமத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story