அரியானா வனப்பகுதியில் 232 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு


அரியானா வனப்பகுதியில் 232 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 26 Feb 2022 9:16 AM IST (Updated: 26 Feb 2022 9:16 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் கவனிப்பாரற்று பல சாக்கு மூட்டைகளில் இருந்த 232 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

சண்டிகர்,

வெள்ளிக்கிழமை மங்களூரின் வனப்பகுதியில் பல சாக்கு மூட்டைகளில் இருந்த 232 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே போன்று அம்பாலா மற்றும் குருக்ஷேத்ரா மாவட்டங்களில் சாஹா பகுதியில்  இருந்து துருப்பிடித்த ஆறு வெடிமருந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவின் மங்லோரா கிராம வனப்பகுதியில் பெக்னா ஆற்றில் வெவ்வேறு அளவுகளில் இருந்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் ஆய்வு செய்தனர். 

முதற்கட்ட விசாரணையில், “பல சாக்கு மூட்டைகளில் இருந்த 232 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள், மணல் சுவர் கட்டப்பட்டு, பீரங்கி குண்டுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படும்," என்று போலீசார் தெரிவித்தனர்.

வெடிபொருள் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த துருப்பிடித்த ராணுவ குண்டுகள் எந்தப் பிரிவுக்கு வழங்கப்பட்டன என்பது குறித்து விசாரனை செய்து வருவதாகவும் எஸ்பி கூறினார்.


Next Story