மாஸ்கை போட்டுக்கொள்ள திணறிய அரசியல் கட்சி பிரமுகர்; வைரல் வீடியோ!
தேர்தல் பிரசார மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் முகக்கவசத்தை முகத்தில் போட்டுக்கொள்ள திணறும் வீடியோ வைரலாகி வருகிறது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், தேர்தல் பிரசார மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் முகக்கவசத்தை முகத்தில் போட்டுக்கொள்ள திணறும் வீடியோ வைரலாகி வருகிறது.
அவர் 2 நிமிடங்களுக்கும் மேலாக அந்த மாஸ்கை போட்டு கொள்ள படாதபாடு பட்டுள்ளார்.அதை வீடியோவாக பதிவு செய்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அதனை பதிவிட்டு வைரலாக்கி உள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்த சம்பவம் நடைபெற்றது.
அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேடையில் நின்று கொண்டிருந்த சிவசேனா கட்சி பிரமுகர் ஒருவர், அந்த கட்சியின் எம்.பி. தாயிர்யஷீல் மாணே பேசி கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்னால் நின்றிருந்தபடி இந்த செயலை செய்து கொண்டிருந்தார்.
w8 for it...! 😁 pic.twitter.com/uG7gkaNLBg
— Andolanjivi faijal khan (@faijalkhantroll) February 24, 2022
இதன் காரணமாக, எம்.பி.யின் தேர்தல் பிரசாரத்தை கவனித்தவர்களைவிட, அவருக்கு பின்னால் நின்றிருந்தவரின் செயலையே மக்கள் வெகுவாக ரசித்து கவனித்தனர்.
இறுதியில், அவர் கஷ்டப்படுவதை பார்த்த மற்றொரு நபர் அவருக்கு உதவி புரிந்து மாஸ்கை மாட்டிவிட்டார்.
Related Tags :
Next Story