மும்பை: ஒரு மணிநேரம் மின் துண்டிப்பு; ரெயில் சேவை பாதிப்பு
மராட்டியத்தின் மும்பை நகரில் ஒரு மணிநேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டு ரெயில் சேவை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு முலுந்த்-திராம்பே மின் வழித்தடத்தின் வழியே மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் பரிமாற்ற வழித்தடத்தில் இன்று திடீரென பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், இன்று காலை 9.42 மணியளவில் அந்தேரி மற்றும் சர்ச்கேட் பகுதிகளுக்கு இடையே மின் வினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது என மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
எனினும், இன்று காலை 10.53 மணியளவில் மின் வினியோகம் மீண்டும் சீரானது. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது என மும்பை பெருநகர மின்சார வினியோகம் மற்றும் போக்குவரத்து (பெஸ்ட்) துறை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story