கொரோனா 4வது அலை எப்போது...? ஆய்வாளர்கள் கணிப்பு


கொரோனா 4வது அலை எப்போது...? ஆய்வாளர்கள் கணிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2022 1:08 PM IST (Updated: 27 Feb 2022 1:08 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா 4வது அலை எப்போது ஏற்படும்? என்பது பற்றி ஆய்வாளர்கள் கணிப்பு வெளியிட்டு உள்ளனர்.



கான்பூர்,



இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.  இதன்பின்னர் கடந்த 2021ம் ஆண்டு 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.  இதற்கு டெல்டா கொரோனா வகை அடிப்படையாக அமைந்திருந்தது.  அதன்பின், டெல்டா பிளஸ், ஒமைக்ரான் ஆகிய வகைகளாலும் பாதிப்புகள் ஏற்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் அதிவேக பரவல் கொண்டிருந்தது.  எனினும், உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.  நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக குறைந்து வருகின்றன.  இந்த நிலையில், கொரோனா 4வது அலை பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளன.

இதுபற்றி ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் கொரோனா 4வது அலையானது வருகிற ஜூன் 22ந்தேதி தொடங்கி அக்டோடபர் 24ந்தேதி வரை நீடிக்கும்.

எனினும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்பவே 4வது அலையின் கடுமை அமையும்.  ஒருவேளை 4வது அலை பரவல் தோன்றினால், அது 4 மாதங்கள் வரை இருக்கும் என தெரிவித்து உள்ளது.

இந்த அலையானது ஆகஸ்டு 15ந்தேதி முதல் ஆகஸ்டு 31ந்தேதி வரை உச்சமடையும்.  அதன்பின்னர் குறைய தொடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.  நாட்டில் கொரோனா அலை பற்றி 3வது முறையாக ஐ.ஐ.டி. கான்பூர் கணித்து வெளியிட்டுள்ளது.

அவற்றில் குறிப்பிடும்படியாக, 3வது கொரோனா அலை பற்றி வெளியான கணிப்பு ஒரு சில நாட்கள் தள்ளி சென்றது தவிர்த்து, துல்லியமுடன் அமைந்திருந்தது.


Next Story