யானை சவாரி செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...!


யானை சவாரி செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...!
x
தினத்தந்தி 27 Feb 2022 4:07 PM IST (Updated: 27 Feb 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரது மகள் ஸ்வேதாவுடன் அசாமில் யானை சவாரி செய்தார்.

அசாம்,

3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை அசாம் சென்றார். அன்று கவுகாத்தியில் புகழ்பெற்ற அஹோம் ஜெனரல் லச்சித் போர்புகானின் 400 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். அதன்பின்னர் நேற்று (சனிக்கிழமை) தேஜ்பூர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், இன்று அசாம் மாநிலம் காசிரங்காவில் உள்ள தேசிய பூங்காவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி, மகள் ஆகியோருடன் சென்றார். ராம்நாத் கோவிந்தும், அவரது மகள் ஸ்வேதாவும் யானையில் மேல் ஏறி சவாரி செய்து, வனப்பகுதியை ரசித்து, விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் கண்டுகளித்தனர்.

ஜனாதிபதின் ராம்நாத் கோவிந்த் யானை சவாரி செய்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story