கேரளாவில் கொரோனா பாதிப்புகள் குறைவு; கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது.
திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் சமீப வாரங்களாக குறைந்து வருகிறது. எனினும், கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை குறையாமல் நீடித்தது. இதனால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் கேரளாவில் குறைந்து வரும் சூழல் காணப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு கூடுதல் தளர்வுகளை அறிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, ஓட்டல்கள், மதுபான விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் திரையரங்குகளில் 100% அளவுக்கு இருக்கைகளில் அமர்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் 25 சதுர அடிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 1,500 பேர் வரை கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறது என்று முதல்-மந்திரி அலுவலகம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story