மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவு
x
தினத்தந்தி 28 Feb 2022 10:04 AM IST (Updated: 28 Feb 2022 10:04 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகளுக்கும் கூடுதலாக சரிவடைந்து 55 ஆயிரம் புள்ளிகளாக உள்ளது.



மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகளுக்கும் கூடுதலாக சரிவடைந்து 55 ஆயிரம் புள்ளிகளாக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு வெகுவாக சரிந்து 16,400க்கு கீழ் சென்றுள்ளது.

இதற்கு முன், நேற்று வர்த்தக நிறைவில் சென்செக்ஸ் குறியீடு 55,858.52 புள்ளிகளாகவும், நிப்டி குறியீடு 16,658.40 புள்ளிகளாகவும் இருந்தது.  ரஷியா, உக்ரைன் நாடுகள் இடையேயான போரால் பங்கு சந்தைகள் போர் தொடக்க நாளில் சரிவடைந்து, அடுத்த நாளில் அதிரடியாக ஏற்றம் கண்டது.  இந்த நிலையில், சில நாட்களாக பங்கு சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுகிறது.


Next Story