சொந்த தொகுதியில் பிரதமர் மோடி உரையின் போது காலியாக இருந்த நூற்றுக்கணக்கான இருக்கைகள்


சொந்த தொகுதியில் பிரதமர் மோடி உரையின் போது காலியாக இருந்த நூற்றுக்கணக்கான இருக்கைகள்
x
தினத்தந்தி 28 Feb 2022 10:52 AM IST (Updated: 28 Feb 2022 10:52 AM IST)
t-max-icont-min-icon

வாரணாசியில் 'பூத் விஜய் சம்மேளனத்தில்' பிரதமர் உரையின் போது நூற்றுக்கணக்கான இருக்கைகள் காலியாக இருந்தன


வாரணாசி,

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 'பூத் விஜய் சம்மேளனத்தில்' கலந்துகொண்ட 20,000க்கும் மேற்பட்ட பா.ஜனதா வாக்குசாவடி நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடியின் உரை தாமதமானதால், அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

நேற்று பிரதமர் மோடியின் தொகுதியான  வாரணாசியில் உள்ள 3361 வாக்கு சாவடி  நிர்வாகிகளுக்கு ‘பூத் விஜய் சம்மேளனத்துக்கான’ வெற்றி மந்திரத்தை பிரதமர் மோடி வழங்க இருந்தார். ஆனால், மாநாடு அரை மணி நேரம் தாமதமாக  தொடங்கியது. இதனால் வாக்குசாவடி நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் பிரதமர் மோடியின் உரையின் போது நூற்றுக்கணக்கான இருக்கைகள் காலியாக காணப்பட்டன.

ஆஜ்தக் சாவடி அதிகாரிகளிடம் பேசியபோது, ​​அனைவரும் இடத்தை விட்டு வெளியேறுவதற்கு வெவ்வேறு காரணங்களைக் கூறியதாக கூறினார்.

இதேபோல் பிரதமர் உரையின் போது பா.ஜனதா ஓபிசி முன்னணி தலைவர் சோம்நாத் மவுரியாவும் வெளியேறினார். அனைவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறியதற்கான காரணத்தைக் கேட்டபோது, ​​மதியம் முதல் மக்கள் அந்த இடத்தில் காத்திருந்ததாக சோம்நாத் தெளிவுபடுத்தினார். "அவர்கள் அனைவரும் பசியாகவும் சேர்வாகவும் இருந்தனர். நாற்காலிகள் காலியாக இல்லை. மக்கள் திரும்பி வருவார்கள்" என்றார்.

மற்றொரு நிர்வாகியான பா.ஜனதா  மண்டல் தலைவர் மோனிகா பாண்டேவும் வெளியேறினார். அவர் வெளியேறியது குறித்து காரணம் கேட்டபோது, ​​தனது மகளுக்கு தேர்வு இருப்பதாகவும், அவர் அவளை மைதானத்தின் வாயிலில் இறக்கிவிடப் போவதாகவும் கூறினார்.

Next Story