சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளகாதலன் கைது...!


சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளகாதலன் கைது...!
x
தினத்தந்தி 28 Feb 2022 4:24 PM IST (Updated: 28 Feb 2022 4:24 PM IST)
t-max-icont-min-icon

6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி பகுதியை சேர்ந்தவர் கபீர் (வயது 39). இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து உள்ளார். இதனால் அந்த பெண்ணை வீட்டுக்கு  கபீர் அடிக்கடி வந்து சென்று உள்ளார்.
இது போன்று சம்பவத்தன்று வீட்டுக் வந்த கபீர், அந்த பெண் இல்லாததால் வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாயிடம் இது தொடர்பான தகவலை அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்க பதிவு செய்த போலீசார் கபீரிரை போக்சோவில் கைது செய்து சிறையிலி அடைத்தனர்.

6 வயது சிறுவனுக்கு தாயின் கள்ளக்காதலன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story