உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை


உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை
x
தினத்தந்தி 28 Feb 2022 9:58 PM IST (Updated: 28 Feb 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

புதுடெல்லி,

கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.  பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இதற்காக ஆபரஷேன் கங்கா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு கடந்த சனிக்கிழமை முதல் சிறப்பு விமானங்களை இயக்கி இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  

 மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அரசு 4 மந்திரிகளை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்படுள்ளது.  இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் நடைபெறும் 3-வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். 

Next Story