அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சி


அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சி
x
தினத்தந்தி 1 March 2022 8:31 AM IST (Updated: 1 March 2022 8:31 AM IST)
t-max-icont-min-icon

அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதிஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 20.3 சதவீதமும், இரண்டாவது காலாண்டில் 8.5 சதவீதமும் வளர்ச்சி அடைந்தது. இந்தநிலையில், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் 5.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் வெறும் 0.7 சதவீத வளர்ச்சியே ஏற்பட்டு இருந்தது. இதற்கிடையே, நடப்பு நிதி ஆண்டில், 9.2 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம், முன்பு கணித்து இருந்தது. 

தற்போது, தனது புதிய கணிப்பில், 8.9 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறியுள்ளது.

Next Story