216 இந்தியர்களுடன் புறப்பட்ட 8-வது விமானம் டெல்லி வந்தடைந்தது...!


216 இந்தியர்களுடன் புறப்பட்ட 8-வது விமானம் டெல்லி வந்தடைந்தது...!
x
தினத்தந்தி 1 March 2022 3:50 PM IST (Updated: 1 March 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

புடாபெஸ்டில் இருந்து 216 இந்தியர்களுடன் புறப்பட்ட 8-வது விமானம் டெல்லி வந்தடைந்தது.

புதுடெல்லி,

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மத்திய அரசின் நடவடிக்கையால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் வின் ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து 216 இந்தியர்களுடன் புறப்பட்ட 8-வது விமானம் தற்போது டெல்லி  வந்தடைந்துள்ளது. அதில் வந்த இந்தியர்களை மத்திய மந்திரி ஆர்.கே.சிங் வரவேற்றார், அவருடன் மத்திய சுகாதரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாயும் வரவேற்றார்.

Next Story