பாடிக்கொண்டிருக்கும் போதே இடிந்து விழுந்த மேடை; அசராமல் கச்சேரியை தொடர்ந்த சூபி இசைக்குழுவினர்!!


பாடிக்கொண்டிருக்கும் போதே இடிந்து விழுந்த மேடை; அசராமல் கச்சேரியை தொடர்ந்த சூபி இசைக்குழுவினர்!!
x
தினத்தந்தி 1 March 2022 3:58 PM IST (Updated: 1 March 2022 4:09 PM IST)
t-max-icont-min-icon

மேடை இடிந்து விழுந்த போதிலும் கடமை தவறாது கச்சேரியை தொடர்ந்து நடத்திய சூபி இசைக்குழுவினர் வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாது.

புதுடெல்லி,

மேடையில் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது அதனை கண்டு ரசிக்கலாம். ஆனால் அந்த மேடை திடீரென இடிந்து விழுந்தால்..! அப்படியொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. 

கவ்வாலி என்பது சூஃபி இஸ்லாமிய பக்தி பாடலின் ஒரு வடிவம். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஒரு மேடையில், சுமார் 15-20 பேர் கொண்ட குழுவினர் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று  மேடை இடிந்து விழுந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து நின்றனர்.

ஆனால் சற்றும் எதிர்பாராமல், மேடையில் இருந்த கச்சேரி குழுவின் தலைமை நபர், பார்வையாளர்களை நோக்கி கோபத்துடன்,  ‘உங்களை யார் எழும்பச் சொன்னார்கள்; உட்காருங்கள்’ என்று கூறினார். பின்னர் சற்றும் அசராமல் கச்சேரியை தொடர்ந்தார்.

பொதுவாக இத்தகைய தருணங்களில் யாராக இருந்தாலும் அதிர்ச்சி அடைந்து நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்துவிடுவார்கள். ஆனால், விதிவிலக்கக அந்த குழுவினர், மேடை இடிந்து விழுந்த போதிலும் கடமை தவறாது கச்சேரியை தொடர்ந்து நடத்தி ஆச்சரியமடைய செய்தனர்.

இந்த சம்பவத்தை வீடியோவாக படம்பிடித்த சிலர், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பர்த்தால் கண்டிப்பாக சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாது.  
'ஒரு கலைஞன் எந்தவொரு சூழலிலும் அச்சப்படக் கூடாது' என்று குறிப்பிட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவானிஷ் சரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை, 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story