உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர காரணம் நமது நாட்டின் வலிமையே - பிரதமர் மோடி
இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால் தான் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை நாம் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர முடிகிறது என மோடி தெரிவித்துள்ளார்
ராபர்ட்ஸ்கஞ்,
உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 5 கட்ட தேர்தல் முடிந்தநிலையில், நாளை 6-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
10 மாவட்டங்களில் அடங்கிய 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. அந்த தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்
இன்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். உக்ரைன் நாட்டில் இருந்து நாம் 1000 இந்தியர்களுக்கு மேல் மீட்டு கொண்டு வந்துள்ளோம்.
இந்த பணியை விரைவுபடுத்துவதற்காக 4 மத்திய மந்திரிகளை உக்ரைன் நாட்டின் அண்டை நாட்டிற்கு நாம் அனுப்பியுள்ளோம்.
இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால் தான் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நம் நாட்டினரை நாம் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர முடிகிறது.
இவ்வாறு மோடி பேசினார்.
Related Tags :
Next Story