ருமேனியாவிலிருந்து 200 இந்தியர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது
ருமேனியாவில் இருந்து 200 இந்தியர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியவுடன், உக்ரைன் தனது வான்பகுதியை மூடிவிட்டது. இதனால், அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மாற்று திட்டமாக, உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றுக்கு இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து அவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
‘ஆபரேஷன் கங்கா’ என்ற இந்த மீட்பு பணியை மேற்பார்வையிட 4 மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளார். மீட்பு பணியில் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் 24 மணி நேரமும் இயங்கி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ருமேனியாவில் இருந்து 200 இந்தியர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது. இன்று இரவு 11 மணி அளவில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப்படையில் சி17 விமானம் மூலம் உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான 4 விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
போலந்து, ஹங்கேரியிலிருந்து புறப்படும் சி 17 விமானங்கள் நாளை காலை இந்தியா வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story