டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 0.81 சதவிகிதமாக குறைந்தது


டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 0.81 சதவிகிதமாக குறைந்தது
x
தினத்தந்தி 2 March 2022 8:38 PM IST (Updated: 2 March 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 40,284- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 3-வது அலை பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மேலும் 325- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றில் இருந்து மேலும் 440-  பேர் குணம் அடைந்துள்ளனர். புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1653- ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 40,284- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 


Next Story