உக்ரைன்: லீவிவ் நகரில் தற்காலிக இந்திய தூதரகம்


உக்ரைன்: லீவிவ் நகரில் தற்காலிக இந்திய தூதரகம்
x
தினத்தந்தி 2 March 2022 8:58 PM IST (Updated: 2 March 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனின் லீவிவ் நகரில் தற்காலிக இந்திய தூதரகம் அமைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

உக்ரைனிடம் இருந்து துறைமுக நகரான கெர்சானை கைப்பற்றியது ரஷியா.  நாலாபுறமும் இருந்து உக்ரைனுக்குள் தொடர்ந்து முன்னேறுவதாக ரஷியப் படைகள் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், உக்ரைனின் லீவிவ் நகரில் தற்காலிக இந்திய தூதரகம் அமைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

இது குறித்து  இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் அனைவரும் வெளியேறி உள்ளனர்.

இதனையடுத்து இந்தியர்கள் எல்லைக் கடப்பதற்கு வசதியாக உக்ரைனின் லீவிவ் நகரில் தற்காலிக தூதரகம் அமைப்பதற்காக அதிகாரிகள் லீவிவ் நகரில் உள்ளனர்.  

கிழக்கு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவ, நாங்கள் அங்கு செல்வதற்கான தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் குழுக்கள் அங்கு செல்ல முடியுமா என்று நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.  மற்ற நாடுகளுக்கும்  உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story