மராட்டியத்தில் புதிதாக 38 பேருக்கு ஒமைக்ரான் தொற்று
கொரோனா பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 349- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 544- ஆக குறைந்துள்ளது. இதில் 38 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 66 ஆயிரத்து 924- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இன்று பதிவாகவில்லை. இதனால், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 706- ஆகவே நீடிக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,007 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,643- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 349- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story