கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 200-க்கு கீழ் குறைந்தது....!
கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 200-க்கு கீழ் குறைந்துள்ளது.
பெஙகளூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் இன்று புதிதாக 188 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,41,453 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,969 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 816 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,97,239ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 4,207 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story