“இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தாமதமாக தொடங்கியது” - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


“இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தாமதமாக தொடங்கியது” - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 March 2022 2:25 AM IST (Updated: 3 March 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர் ஆபத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைனில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் மாணவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை தாமதமாக தொடங்கியது. உக்ரைனில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்ற நம்பிக்கையை இந்தியர்கள் மனதில் உருவாக்கி தவறு செய்து விட்டது. 

அதனால், ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர் ஆபத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இந்திய அரசு, வார்த்தைகளால் சமாளிப்பதை நிறுத்த வேண்டும். குண்டு வீச்சை நிறுத்துமாறு ரஷியாவிடம் உரத்த குரலில் தெரிவிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story