காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 60 கிலோ தங்கம் நன்கொடை
பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை தொழில் அதிபர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார்.
வாரணாசி,
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை தொழில் அதிபர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார். நன்கொடை அளித்தவரின் விவரங்கள் வெளியாகவில்லை.
இது குறித்து வாரணாசி கோட்ட ஆணையர் தீபக் அகர்வால் கூறுகையில், “பெயர் குறிப்பிட விரும்பாதவரிடம் இருந்து சமீபத்தில் பெறப்பட்ட 60 கிலோ தங்கத்தில், 37 கிலோ தங்கம் கருவறையின் உள் சுவர்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 23 கிலோ தங்கம் பிரதான கட்டமைப்பின் தங்க குவிமாடத்தின் கீழ் பகுதியை அலங்கரிக்க பயன்படுத்தப்படும்” என்றார். கடந்த மாதம் 27-ந்தேதி பிரதமர் மோடி வாரணாசி வந்தபோது, கோவிலின் உள் சுவர்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story