பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான பாதைக்கு திரும்ப வேண்டும் - குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்


பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான பாதைக்கு திரும்ப வேண்டும் - குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 March 2022 2:24 AM IST (Updated: 4 March 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான பாதையின் முக்கியத்துவம் குறித்து குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ‘குவாட்’ ஆகும்.  

இந்நிலையில் குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இந்திய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான பாதையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். ஐநா சாசனத்தை கடைபிடிப்பது, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்’ என இந்திய பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

Next Story