மும்பை பங்கு சந்தை நிலவரம்: இரண்டாவது நாளாக சரிவு
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பங்குச் சந்தை இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தது.
மும்பை,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், பங்குச் சந்தை வியாழனன்று ஆரம்ப ஆதாயங்களை இழந்து இன்று இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை தலா 0.65 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
சென்செக்ஸ் 1050.65 புள்ளிகள் சரிந்து 54,052.03 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 304.40 புள்ளிகள் சரிந்து, தற்போது 16,193.65 ஆக உள்ளது.
Related Tags :
Next Story