விசாகப்பட்டினத்தில் ‘மிலான் 2022’ கடற்படை கூட்டுப் பயிற்சி நிறைவு
‘மிலான் 2022’ கடற்படை கூட்டுப் பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.
விசாகப்பட்டினம்,
இந்திய கடற்படை சார்பில், ‘மிலான் 2022’ எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி, விசாகப்பட்டினத்தில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. ‘தோழமை, ஒற்றுமை, ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ‘மிலான் 2022’ கூட்டுப்பயிற்சி நேற்று நிறைவு பெற்றது.
இந்த பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்த பயிற்சி 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை துறைமுகம் சார்ந்தும், மார்ச் 1 முதல் மார்ச் 4 வரை கடல் சார்ந்தும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற இந்த கூட்டுப் பயிற்சியில் 26 கப்பல்கள், 21 விமானங்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பங்கேற்றன. இதில் துப்பாக்கிச்சூடு, நீர்மூழ்கி கப்பலின் எதிர்தாக்குதல் மற்றும் ஹெலிகாப்பட்ர்களின் தரையிறக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து வீரர்கள் பயிற்சி எடுத்தனர்.
கடல்சார் படைகளின் செயல்பாட்டு திறன்களை வளர்த்துக்கொள்வது, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை இந்த பயிற்சியின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது. மேலும் ‘மிலான் 2022’ மூலம் உலக அளவில் இந்தியாவை முக்கிய கடல்சார் சக்தியாக நிறுவ முடியும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story