"தயவு செய்து தமிழ்ப் பெயரை சூட்டுங்கள்" - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழை படித்தால் தான் உயர்வு என்பதை அறிய வேண்டும். தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுவை,
புதுவை கடற்கரை சாலையில் ஒளவையார் விழா நடைபெற்றது. இந்த விழாவை புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் முதல்-மந்திரிரங்கசாமி மற்றும் மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்,
வாயில் நுழையாத பெயரை பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவதாக குற்றசாட்டியதுடன், தமிழை படித்தால் தான் உயர்வு என்பதை அறிய வேண்டும். தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story