உலக அரங்கில் அதிகரித்துவரும் செல்வாக்கினால் இந்தியர்களை மீட்க முடிந்தது - பிரதமர் மோடி
மிகப்பெரும் நாடுகள் கூட உக்ரைனில் சிக்கித் தவித்த தங்கள் நாட்டு மக்களை மீட்க சவால்களை சந்தித்தன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புனே,
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள சிம்பயோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருவதாக கூறினார்.
‘கொரோனா பரவியபோது அதனை நாம் வெற்றிகரமாக கையாண்டோம். அதேபோல் இப்போது உக்ரைனில் உள்ள சூழ்நிலையையும் கையாள்கிறோம். மிகப்பெரும் நாடுகள் கூட உக்ரைனில் சிக்கித் தவித்த தங்கள் நாட்டு மக்களை மீட்க சவால்களை சந்தித்தன. ஆனால், உலக அரங்கில் இந்தியாவின் அதிகரித்துவரும் செல்வாக்கினால் இந்தியர்களை மீட்க முடிந்தது” என்றார்.
Related Tags :
Next Story