உக்ரைன் துப்பாக்கிசூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் டெல்லி திரும்பினார்
போலந்தின் ரெஸ்ஸோவில் இருந்து டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு அவர் வந்து சேர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியை சேர்ந்தவர் ஹர்ஜோத் சிங். உக்ரைனில் படித்து வருகிறார். கடந்த 27-ந் தேதி, அவர் வேறு 2 இந்தியர்களுடன் காரில் உக்ரைனை விட்டு வெளியேற முயன்றார். அப்போது கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், ஹர்ஜோத் சிங் குண்டு பாய்ந்து காயமடைந்தார். தலைநகர் கீவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், இந்திய அரசின் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின்கீழ் ஹர்ஜோத் சிங் இன்று மீட்கப்பட்டு, டெல்லிக்கு அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இந்திய விமான படையை சேர்ந்த விமானத்தில் அவர் தற்போது டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளார். போலந்தின் ரெஸ்ஸோவில் இருந்து டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு அவர் வந்து சேர்ந்துள்ளார்.
Related Tags :
Next Story