தேர்தலை கருத்தில் கொண்டு எண்ணெய் விலை கட்டுப்படுத்தி வைக்கபட்டதா? - மத்திய மந்திரி விளக்கம்


கோப்புப்படம்: ஏஎன்ஐ
x
கோப்புப்படம்: ஏஎன்ஐ
தினத்தந்தி 8 March 2022 4:02 PM IST (Updated: 8 March 2022 4:02 PM IST)
t-max-icont-min-icon

தேர்தலை கருத்தில் கொண்டு எண்ணெய் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தியதா என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளால் சர்வதேச பொருளாதாரத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக உலகம் முழுவுதும் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டுதான் எண்ணெய் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தியதாக கூறுவது சரியல்ல என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளதாவது:

உலக சந்தையின் முடிவுகளை பொறுத்தே  எண்ணெய் விலை தீர்மானிக்கப்படுகிறது. 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டுதான் எண்ணெய் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தியதாக கூறுவது சரியல்ல.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் நடைபெற்று வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் அதைக் கருத்தில் கொள்வார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுப்போம். எங்கள் எரிசக்தி தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்: 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story