காஷ்மீர் குண்டு வீச்சு சம்பவம்; 2 பேர் கைது
காஷ்மீரில் பொதுமக்கள் மீது கையெறி குண்டு வீசியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமீரா கடல் பாலம் அருகே பொதுமக்கள் அதிகளவில் இருந்த நிலையில், கையெறி குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் குடிமக்கள் 36 பேர் உள்பட 38 பேர் காயமடைந்தனர். இதில், பொதுமக்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஸ்ரீநகர் எஸ்.பி. லட்சயா சர்மா இன்று கூறும்போது, இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதில், 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story