உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் குறைந்ததும் நவீன் உடல் கொண்டுவரப்படும்- பசவராஜ் பொம்மை பேட்டி


உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் குறைந்ததும் நவீன் உடல் கொண்டுவரப்படும்- பசவராஜ் பொம்மை பேட்டி
x

உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர் நவீனின் உடலை பதப்படுத்தி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர் நவீனின் உடலை பதப்படுத்தி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கர்நாடகம் கொண்டுவருவது குறித்து வெளியுறவுத்துறை மந்திரியிடம் நான் பேசினேன். நவீனின் உடலை கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

அங்கு வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டதும், நவீனின் உடல் கர்நாடகத்திற்கு கொண்டு வரப்படும். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story