உலக மகளிர் தினத்தில் ‘சமையல் பொருட்கள்’ விற்பனை ஊக்குவிப்பு - சர்ச்சையில் சிக்கிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம்
உலக மகளிர் தினத்தில் ‘சமையல் பொருட்கள்’ விற்பனையை ஊக்குவித்த ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது.
புதுடெல்லி,
உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக மகளிர் தினத்திற்கு சமையல் பொருட்களை ஊக்குவிப்பது போன்ற விளம்பரங்களை வெளிட்ட பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்காட் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மகளிர் தினமான நேற்று பிளிப்காட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், மதிபிற்குரிய வாடிக்கையாளர்களே இந்த பெண்கள் தினத்தில் உங்களை கொண்டாடுவோம். சமையல் பாத்திர பொருட்களை ரூ.299 முதல் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தது. மேலும், தங்கள் வர்த்தக தளத்திலும் இதுபோன்ற செய்தியையே பிளிப்காட் வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து பெண்கள் தினத்தில் சமையல் தொடர்பான விற்பனையை ஊக்குவித்த பிளிப்காட்டிற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது. இதனால், தனது செயலுக்கு பிளிப்காட் மன்னிப்புக்கோரியுள்ளது.
Related Tags :
Next Story