தெலுங்கானா: நிலக்கரி சுரங்கத்தில் விபத்து - 3 பேர் பலி


தெலுங்கானா: நிலக்கரி சுரங்கத்தில் விபத்து - 3 பேர் பலி
x
தினத்தந்தி 9 March 2022 1:55 PM IST (Updated: 9 March 2022 1:55 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தின் பெட்டபள்ளி மாவட்டத்தில் மாநில அரசுக்கு சொந்தமான குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் கடந்த திங்கட்கிழமை தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். அப்போது, சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சிக்கிக்கொண்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 4 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், எஞ்சிய 3 பேர் மீட்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பல மணி நேரமாக மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரும் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால், இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. 

சடலமாக மீட்கப்பட்ட 3 பேரின் உடலும் தற்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.    

Next Story