சண்டிகர் ரெயில் நிலையம்: திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது..!
சண்டிகரில் நின்று கொண்டிருந்த ரெயிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சண்டிகர்,
சண்டிகர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலில் விலையுயர்ந்த பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சோட் லால், ஜிதேந்திர யாதவ், மனக் ராம் மற்றும் இந்திரபால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், சத்பவ்னா எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் இரவு 9.30 மணியளவில் நின்று கொண்டிருந்த ரெயில், தண்டவாளத்தை விட்டு கிளம்பும் போது, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சிலர் அதில் இருந்து குதிப்பதைக் காண முடிந்தது.
அவர்களை சோதனையிட்டதில், ஜம்மு விரைவு ரெயிலில் இருந்து மார்ச் 6ஆம் தேதி திருடப்பட்ட மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் இருந்து, 2,000 ரூபாய் ரொக்கம் வைத்திருந்த, இரண்டு பெண்களின் பர்ஸ், மற்றொரு போன், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவையும் மீட்கப்பட்டன என தெரிவித்தார்.
அவர்கள் நால்வரும் ரெயில்களில் விற்பனையாளர்களாக வேலை செய்து, போதைப்பொருள் பழக்கத்திற்காக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story