கோவா, உத்தரகாண்ட் , மணிப்பூரில் கடும் இழுபறி- முன்னிலை நிலவரம்
உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் முன்னனியில் நிலவரம் வெளியாகியுள்ளது.
டேராடூன்,
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசம், கோவா மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 201தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 71 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 76 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலிதளம் 8 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கோவா மாநிலத்தில் இழுபறி நிலை காணப்படுகிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் 5 இடத்திலும் மற்றவை 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 30 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது முதல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அந்த கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடத்திலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Related Tags :
Next Story