பஞ்சாப் தேர்தல் வாக்கு எண்ணிக்கை; நடிகர் சோனு சூட்டின் சகோதரி பின்னடைவு!
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான டாக்டர். அமந்தீப் கவுர் அரோரா முன்னிலை வகிக்கிறார்.
சண்டிகர்,
நடிகர் சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் சச்சார் பஞ்சாப் தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்டார். அவர் பஞ்சாப் மாநிலம் மோகா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் கண்டார்.
இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அவர் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வேட்பளராக டாக்டர். அமந்தீப் கவுர் அரோரா போட்டியிட்டார். அகாலி தளம் கூட்டணி சார்பில் பர்ஜிந்தர் சிங் மகான் ப்ரார் களம் கண்டார். பாஜக சார்பில் டாக்டர் ஹர்ஜோத் கமல் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான டாக்டர். அமந்தீப் கவுர் அரோரா முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தேர்தலுக்கு முன் மால்விகா சூட் சச்சார் பேசியதாவது, “மக்கள் என்னிடம் போன் மூலம் அழைத்து ‘நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க காத்திருக்கிறோம். தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்க உள்ளோம்’ என்று கூறினர். நாங்கள் நிறைய சமூக சேவை மற்றும் சமூக பணிகளை செய்துள்ளோம். பிற வேட்பாளர்கள் இத்தகைய சமூக பணிகளை செய்யவில்லை” என்று கூறியிருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் ஆம் ஆத்மி முதல் இடத்திலும் உள்ளன.
Related Tags :
Next Story