பஞ்சாப்; பகல் 12 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்!
ஆம் ஆத்மி 41.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.காங்கிரஸ் 25 சதவீதத்துடனும், சிரோமணி அகாலி தளம் 21.7 சதவீதத்துடனும் பின்தங்கியுள்ளன.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் ஆம் ஆத்மி முதல் இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் துரி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ், அகாலிதளம் உள்ளிட்ட பிற கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 90 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் கூட்டணி 7 இடங்களிலும், பாஜக கூட்டணி 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வாக்குப்பகிர்வு விவரங்களை பொறுத்தவரையில், ஆம் ஆத்மி மகத்தான வெற்றியை நோக்கி செல்கிறது, அக்கட்சி இதுவரை 41.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 25 சதவீதத்துடனும், சிரோமணி அகாலி தளம் 21.7 சதவீதத்துடனும் பின்தங்கியுள்ளன.
2017 முதல் 2022 வரையிலான தேர்தல் முடிவுகளை பொறுத்தமட்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களை பெற்றுள்ளது, காங்கிரஸ் 63 இடங்களை இழந்துள்ளது, சிரோமணி அகாலி தளம் 7 இடங்களை இழந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்களை நிஜமாக்கும் வகையில் ஆம் ஆத்மி, பஞ்சாப் மாநில வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியை பிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story