பக்கெட் நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை; பாட்டியின் கள்ளக்காதலன் வெறிச் செயல்...!


பக்கெட் நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை; பாட்டியின் கள்ளக்காதலன் வெறிச் செயல்...!
x
தினத்தந்தி 10 March 2022 4:00 PM IST (Updated: 10 March 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

பக்கெட் நீரில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்த சம்பவத்தில் குழந்தையின் பாட்டியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளுருத்தி பகுதியை சேர்ந்தவர் ஜான் பினாய் டிக்குரூஸ் (வயது 28 ) இவர் எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு கோடசேரி பகுதியைச் சேர்ந்த சிப்சி ( 52) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.  சிப்சி மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிப்சியின் மகன் சஜீவ். இவரது மனைவி டிக்ஸி (30). இருவருக்கு  இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்

மனைவி டிக்ஸி குழந்தைகளின் நலன் கருதி துபாய்க்கு வேலைக்கு சென்று உள்ளார். இதனால் தனது 
2 குழந்தைகளையும் மாமியார் சிப்சியின் பெறுப்பில் விட்டு சென்று உள்ளார்.

இந்த நிலையில் சிப்சியின் முறைதவிரிய வாழ்கை முறையால் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருந்து உள்ளார். அந்த வகையில் நேற்று தனது கள்ளக்காதலன் ஜான் பினாய் டிக்குரூஸ் பொறுப்பில் 2 குழந்தைகளையும் சிப்சி ஒப்படைத்து விட்டு வெளியே சென்று உள்ளார்.

அப்போது குழந்தை மலம் கழித்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  ஜான் பினாய் கழிவறையில் உள்ள பக்கெட்டில் நீரில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்து உள்ளார்.

பின்னர் இந்த தகவலை  சிப்சியிடம் தெரிவித்து உள்ளார். விரைந்து வந்த சிப்சி குழந்தையை மருத்துமனைக்கு எடுத்து சென்று உள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று மருத்துவர்கள் கேட்டதற்கு பால் குடிக்கும் போது குழந்தை மூச்சு திணறி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இதனை அறிந்த போலீசார் குழந்தையின் உயிரிழப்பு குறித்து சிப்சியிடம் விசாரணை நடத்திய போது தனது கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாட்டியின் கள்ளக்காதலன் குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story