"விரைவில் நாடு முழுவதும் புரட்சி ஏற்படும்" - அரவிந்த் கெஜ்ரிவால்


விரைவில் நாடு முழுவதும் புரட்சி ஏற்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 10 March 2022 4:02 PM IST (Updated: 10 March 2022 4:02 PM IST)
t-max-icont-min-icon

ஆம் ஆத்மி என்பது ஒரு அரசியல் கட்சியின் பெயர் அல்ல, புரட்சியின் பெயர் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைவதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவா மாநிலத்திலும் ஆம் ஆத்மி, இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெனாலிம் மற்றும் வெலிமில் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் இது கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்கும் எனது சகோதரர் பகவந்த் மான் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஆம் ஆத்மி 90 இடங்களைத் தாண்டியுள்ளது, முடிவுகள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், நாங்கள் அதை உடைக்க மாட்டோம். இந்த நாட்டின் அரசியலை மாற்றி அமைப்போம். 

பஞ்சாபில் புதிதாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை திறப்போம். மருத்துவம் படிக்க எந்த மாணவரும் உக்ரைனுக்கு செல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, உண்மையான ‘தேச பக்தர்’ என்பதை மக்கள் காட்டியுள்ளனர். விரைவில் நாடு முழுவதும் புரட்சி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story