உ.பி.யில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது - தொண்டர்கள் மத்தியில் யோகி ஆதித்யநாத் பேச்சு


உ.பி.யில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது - தொண்டர்கள் மத்தியில் யோகி ஆதித்யநாத் பேச்சு
x
தினத்தந்தி 10 March 2022 7:10 PM IST (Updated: 10 March 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலால், புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதுஎன உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் பாஜக 268 ல் முன்னிலை வகித்து வருகிறது. சமாஜ்வாதி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தநிலையில்,   லக்னோவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வருகை தந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  நாங்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது, அவர்கள் (எதிர்க்கட்சி) எங்களுக்கு எதிராக சதி செய்து கொண்டிருந்தனர். எங்களை வெற்றி பெறச் செய்ததன் மூலம் மக்கள் மீண்டும் தேசியவாதத்திற்கு, நல்லாட்சிக்கு வாக்களித்துள்ளனர். தொடர்ந்து பணியாற்றுவது எங்கள் பொறுப்பு. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலால், புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story