இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்தது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
நமது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 4,184 ஆக இருந்த நிலையில் இன்று 4,194 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,29,80,067 லிருந்து 4,29,84,261 ஆக உயர்ந்துள்ளது. ஓரே நாளில் 6,208 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,20,120 லிருந்து 4,24,26,328 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 42,219 ஆக குறைந்தது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 255 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 16,73,515 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 179.72 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story