4 மாநில தேர்தல் வெற்றி; பிரதமர் பேரணியில் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய் என கோஷம்


4 மாநில தேர்தல் வெற்றி; பிரதமர் பேரணியில் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய் என கோஷம்
x
தினத்தந்தி 11 March 2022 12:42 PM IST (Updated: 11 March 2022 1:20 PM IST)
t-max-icont-min-icon

உ.பி. உள்ளிட்ட 4 மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு நடந்த பிரதமர் பேரணியில் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆமதாபாத்,



உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.  இவற்றின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.  இதில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.  பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.

4 மாநில தேர்தலில் பெற்ற வெற்றியை முன்னிட்டு குஜராத்தின் ஆமதாபாத் நகரில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி சாலையில் கூட்டத்தினரை நோக்கி வெற்றி சின்னம் காட்டியபடி இன்று சென்றார்.  இதற்காக சாலையின் இருபுறத்திலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் திரளாக கூடியிருந்தனர்.  கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசாரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.  இந்த பேரணியின்போது, சாலையின் ஓரத்தில் மேடை அமைக்கப்பட்டு பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் மக்கள் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய் என கோஷங்களை எழுப்பினர்.  சாலையின் ஓரத்தில் காவி கொடியும், காவி நிறத்தில் பலூன்களும் பறக்க விடப்பட்டு இருந்தன.  தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் பேரணியாக சென்றுள்ளார்.


Next Story