தற்கொலை என்ற முடிவை பெண்கள் எடுக்கக் கூடாது - தமிழிசை சவுந்தரராஜன்
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தயக்கமின்றி கூறும் வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுவை,
புதுவையில், மகளிர் தினவிழாவில் துச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்கள் பொது வெளியில் நாகரீகமான உடைகளை அணிவது அவசியம். உடைகளில் கட்டுபாடு இருக்க வேண்டும். கண்டபடி மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணியக் கூடாது. பெண்கள் நாகரிக உடைகள் உடுத்துவதில் கவனம் தேவை. பெண்ணுரிமையை தவறாக பயன்படுத்துகிறோம்.
கண்டமேனிக்கு உடை உடுத்துவது தான் பெண்ணுரிமை என நினைக்கிறார்கள். நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் உள்ளது. உடையில் ஒரு கட்டுபாடு இருக்க வேண்டும். நல்ல படிக்க வேண்டும், சாதனை செய்து, மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் பெண் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை .
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவை பெண்கள் எடுக்கக் கூடாது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தயக்கமின்றி கூறும் வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு என்ன என்ன அறிவுரைகள் கொடுக்கின்றீர்களோ அவை எல்லாம் ஆண் குழந்தைகளுக்கும் கொடுக்கவேண்டும்; ஒரு பெண்ணுக்கு வரும் சமூக பிரச்சனைகளுக்கு ஆணும் காரணமே”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story